Wednesday, December 23, 2015

Benefits of Banana Leaves (வாழை இலையின் பயன்கள்...!)



வாழை இலையின் பயன்கள்...!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து
பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது 

விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். 

இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 

ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். 

இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம்
முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே
நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Thursday, December 17, 2015

How to avoid kidney stones (சிறுநீரகக் கல்...!!!)


இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும்.

 நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

 பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்

Wednesday, December 16, 2015

Increasing the Immunity Power by using Gooseberry (நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்)




நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்
ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.
பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.
இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.
ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.
நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.

Sunday, November 29, 2015

CHAYOTE Surprising Health Benefits (சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்)




சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது

(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி)

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese)

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber)

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper)

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc)

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K)

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium)

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6)

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium)

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

Monday, November 23, 2015

Drive away the Dengue fever by using chiretta brew: How to make and Uses !! (டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம்: செய்முறை மற்றும் பயன்கள்!!)

நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். 

மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே பல இடங்களில் இந்த கஷாயத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது.

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க...
இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க...


டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, தலைவலி, செரிமானம், மூட்டு வலி, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல பிரச்சனைகளுக்கு இந்த நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வளிக்க கூடியது. 

எடுத்ததும் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடாமல், சிறந்த இயற்கை மருந்தாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தை குடித்து பயனடையுங்கள்....

மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!

தேவையான மூலிகைகள் 

நிலவேம்பு கஷாயம் தயாரிக்க தேவையான ஒன்பது மூலிகைகள்: சிறியாநங்கை (நிலவேம்பு), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு

செய்முறை 

நாம் மேலே கூறியுள்ள ஒன்பது மூலிகைகளை நன்கு உலர (காய) வைத்து, அனைத்து மூலிகைகளையும் சம பங்கு அளவில் எடுத்து கலந்து, அரைத்துப் பொடியாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

செய்முறை 

அரைத்து எடுத்து வைத்துள்ள அந்த பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு, அந்த நீரை இதமான சூட்டுக்கு ஆற வைத்து பருக வேண்டும்.

மூட்டு வலி 

நிலவேம்பு கஷாயம் பருகி வந்தால் மூட்டு வலி மற்றும் உடல் வலி குறையும். மேலும் பின்னாட்களில் இதுப் போன்ற வலிகள் ஏற்படாமல் இருக்க வலு சேர்க்கும். டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது மூட்டு வலியும், தசை வலியும் ஏற்படும் அவற்றை இது சரி செய்கிறது.

நீரிழிவு நோய் 

டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோய்க்கும் நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக விளங்குகிறது. இது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு 

மேலும் நிலவேம்பு கஷாயம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கும் நச்சுக்களை விரைவாக அழிக்க முடியும்.

தலைவலி 

அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் தினம் இரண்டு வேளை இந்த கஷாயத்தை குடித்து வந்தால். தலையில் நீர்க்கட்டு குறைந்து, தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளும் கூட சரியாகும்.

முக்கிய குறிப்புகள் 

நிலவேம்பு கஷாயத்தை தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இல்லையேல் அதன் பயன் இருக்காது. மேலும் பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பத்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தர வேண்டும் எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு கொடுங்கள்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காலை, மாலை என இரு வேளைகள் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குடித்து வந்தால் விரைவாக குணமடையலாம்.

தினமும் கூட குடிக்கலாம் காய்ச்சல் உள்ளவர்கள் தான் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும் என்றில்லை. உடல் வலிமை அதிகரிக்க வேண்டும் எனில், யார் வேண்டுமானாலும் தினமும் இந்த கஷாயத்தை பருகி வரலாம்.

Sunday, November 22, 2015

The Power of Hot Water (வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!)

#‎நெஞ்சு_எரிச்சல்_போகணுமா‬?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!


‪#‎சதை_குறையணுமா‬?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.


‪#‎காலையில்_சரியாக_மலம்‬ கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)


‪#‎உடம்பு_வலிக்கிறதா‬?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.


‪#‎கால்_பாதங்கள்_வலிக்கிறதா‬?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.


‪#‎மூக்கு_அடைப்பா‬?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.


‪#‎வெயிலில்‬ அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.


‪#‎ஜலதோஷம்‬ பிடித்தவர்களுக்கு அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.


‪#‎தரையை_துடைக்கும்‬ போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!


‪#‎திடீரென்று_கடுமையான_தலை_வலியா‬?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.


‪#‎சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்‬
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.


சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.


சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

Please avoid to feed by spoon (தயவு செய்து சிறு கரண்டி மூலம் ஊட்டி விடுவதை தவிர்க்கவும்)


How to reduce the Sugar level without PILL and INJECTION - This is for Diabetes patients (சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்)




சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.


(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
-Via- Arul Thulasi


English translation....
 
Golden fry 1/2kg coriander seed and 1/4kg fenugreek seed separately...


powder them separately and then mix them...add 2 teaspoon of the mixed powder in 2 glasses of water (200 ml)..

now boil well till its reduced to 1 glass...

now drain it and consume before 45 minutes of food for 3 times a day...

in this 45 minutes gap only water can b taken...

try this medicine for 1 month...

let's try

The Rain water Power (மழை நீர் பிராணன்)

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது.
 
மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். 


எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். 

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். 

குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து. 

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக. 

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அமைதியும் 
 ஆரோக்கியமும்)

How to face & succeed the IAS exam ? (ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமா?)

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப் படுகின்றன. 

மூன்று நிலைகளாக முதன்மைத் தேர்வும்,பிரதான தேர்வும் நேர்காணலும் நடத்தப் பட்டுப் போட்டியாளர்களின் திறன் பரிசோதிக்கப்படுகிறது. அவரவர் களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என 23 பிரிவுகளில் பணிகள் வழங்கப் படுகின்றன.


மத்திய அரசின் யு.பி.எஸ்.சி- நிறுவனத்தால் நடத்தப் படுகிற ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ் தேர்வும் தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகிற குரூப் தேர்வுகளும் பொது அறிவையும், மூளைத் திறன் சார்ந்த கேள்விகளைத்தான் அதிகம் உள்ளடக்கி இருக்கின்றன.

உலகத்தின் பல்வேறுபட்ட நிகழ்வுகளையும், நிகழ்ந்தவற்றையும் நீங்கள் எவ்வளவு தூரம் புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மேலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்கள் பணியில் நீங்கள் எவ்வளவு வேகமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே லாஜிக் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அதிகாலை நேரம்

🌻பொது மூளைத் திறன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கென்று தனியாகப் புத்தகங் களும்,கடந்த தேர்வுகளின் கேள்வி- பதில்களோடு நிறையவே கிடைக்கின்றன.

 🌻இணையதளங்களிலும் இது சம்பந்தப்பட்ட கேள்வி-பதில்கள் அதிகம் காணப்படுகின்றன. லாஜிக் கேள்விகளைச் சாதாரணமாக எடை போடுவது தவறு. தினமும் இதற்கென்று நேரம் ஒதுக்கிப் பயிற்சி செய்வது அவசியம்.ஒவ்வொரு விதமான கேள்விகளையும் விடாமல் பயிற்சி செய்து பார்க்கவும். அதிகாலை நேரம் மூளைத் திறன் கேள்விகளுக்குப் பயிற்சி செய்வதற்கு உகந்த நேரம். 

🌻ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி நேரம் இதற்கென்று செலவிடுவது அவசியமாகிறது.

🌻பொது அறிவுக்கென்று புத்தகங்கள் நிறையவே கிடைக்கின்றன. அறிவியல், உலக வரலாறு, புவியியல், இந்திய வரலாறு,பொருளாதாரம், சமூக அவலங்கள், இந்திய அரசியல்,தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், சூழலியல் போன்றவை இதில் அடக்கம். 

🌻இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அடிப்படைத் தகவல்களும், கோட்பாடுகளும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகங்களில் பொதிந்திருக்கின்றன. 

🌻இந்த வகை புத்தகங்கள் அனைத்துமே இணையத் தளத்திலிருந்து இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

♦ஐந்து மணிநேர உழைப்பு

🌻பொது அறிவுப் பாடங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்துக்கும் அரை மணிநேரம் ஒதுக்கிக் குறிப்பெடுத்துப் படிப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பாடங்களுக்கும் அரை மணிநேரம் என்ற விதத்தில் கணக்கிட்டால் ஐந்து மணிநேர உழைப்பு அவசியம்.

🌻 இந்த ஐந்து மணி நேரத்தைச் சிறிது சிறிதாக உயர்த்துகிற பட்சத்தில் தேர்வில் வெற்றியை அடைவதற்கான தூரம் குறைவாகி இலக்கை நோக்கிய நம் நம்பிக்கை உயரும்.

🌻எடுத்து முடித்த குறிப்புகளை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். கல்லூரியில் எப்போது நேரம் கிடைத்தாலும் திரும்பத் திரும்ப அந்தக் குறிப்புகளை வாசித்தால் பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல மனதில் பதியும்.

 🌻ஒவ்வொரு கருத்தும் நிகழ்வும் படிக்கிறபோது அது சம்பந்தப்பட்ட அறிவு, விரிவடைவதை உணருங்கள்.

🌻ஒவ்வொரு நாளும் 250-லிருந்து 300 புறநிலைக் கேள்விகள் (objective questions) படிப்பது, பயிற்சி ஆக்குவது நன்று. அதுபோல ஒவ்வொரு கேள்வி-பதிலுடன் நீங்கள் செலவிடுகிற நேரத்தைப் பொருத்து அது உங்கள் நினைவில் தங்குகிறது. புறநிலைக் கேள்விகள் படிப்பது சாயங்கால நேரத்தில் இருக்கட்டும். 

🌻மனம் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் பாடங்களை விரிவாகப் படித்துக் குறிப்பு எடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்வி-பதில் படிக்கிறபோதும் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிற நேரமாக நினைத்து மகிழ்ச்சியுடன் படித்துப் பழகவும்.

💧காக்கும் டைரி

🌻பயிற்சிக் காலத்தில் மிக முக்கியமான கடமை டைரி எழுதுவது. ஒவ்வொரு நாளும் எந்தெந்தப் பாடத்தை எந்த நேரத்தில் படிக்கப் போகிறீர்கள் என்பதைக் காலையில் எழுந்தவுடன் டைரியில் எழுதிவிடவும்.
 🌻அதன்படியே,பயிற்சியை முடித்த பிறகு தினமும் உறங்கப் போகுமுன் அன்று டைரியில் என்னென்ன வேலைகளைச் செயலாற்றி இருக்கிறீர்கள் என்பதை டிக் செய்யவும். டைரியை தினமும் விடாமல் எழுதும் பட்சத்தில் இலக்கை நோக்கிய பாதையில் நாம் எங்கிருக்கிறோம்,

🌻 இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும்.போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்தப் பழக்கம் மிக அவசியம்.

🌻 கல்லூரிக் காலங்களில் மேற்கூறிய நேர அட்டவணையைத் தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவும்.

🌻செய்தித்தாள்களிலிருந்து அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துப் பதிவு செய்வது தினசரிக் கடமைகளில் ஒன்று. எந்த நாளிதழ் வரலாற்றின் பின்னணியில் ஆய்வு செய்து செய்திகளைத் தருகிறதோ அந்தப் பத்திரிக்கை போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும்.

🌻தேசிய நிகழ்வுகளுக்கும், பன்னாட்டு நிகழ்வுகளுக்கும் தனித் தனியே நோட்டுகளை வைத்துக் குறிப்பு எடுக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்புகளைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

♦15 அடுக்குக் கேள்விகள்

🌻எந்த ஒரு நிகழ்வையோ அல்லது கருத்தையோ படிக்குமுன் அது சார்ந்த கேள்விகளை நிறைய எழுப்பி எழுதிக் கொள்ளவும். உதாரணத்துக்கு சுற்றுச் சூழல் மாசுபடுதல்; ஓசோன் மண்டலம் பாழாதல்; பூவி வெப்பமடைதல்; பனிப்பாறைகள் உருகுதல்; கடல்நீர் மட்டம் உயருதல்; மக்களுக்கு ஆபத்து ஏற்படல்.இதுபோல ஒவ்வொரு கருத்தையும் “ஏன்” என்ற கேள்விகளை எழுப்பிப் படிப்பதற்குச் சாக்ரடியன் மாடல் (அ)டியாலேக்டிக்(Dialectic) முறைமை என்று பெயர்.

🌻இது சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் பிறகு படிக்கும்போது சிறிது சிறிதாகப் பதில்கள் கிடைத்துத் தெளிவு பிறக்கும். பயிற்சி காலக் கட்டத்தில் மன இயல்பை எப்போதும் படித்ததைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டும்,தொடர்புபடுத்திக்கொண்டும் இருப்பது நல்லது.

🌻 உதாரணத்துக்கு ஒளி விளக்கைப் பார்க்கிறீர்கள்; உடனே இதைக் கண்டுபிடித்தது யார், எப்படி, எப்போது, எங்கே, அதன் பயன்கள் என்று மனதை ஒருமுகப்படுத்திப் பயிற்சிக்கு உள்ளாக்குகிறபோது ஒவ்வொரு நாளும் நம்பிக்கை பெருகும்.

🌻பொது அறிவு வினாக்களைப் பொருத்தவரை ஒரு நிகழ்வு அல்லது கருத்தைப் பற்றி 10-லிருந்து 15 அடுக்குத் தகவல்களைக் குறிப்பெடுப்பது அவசியமும் போதுமானதுமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாகக் காந்தியைப் பற்றி படிக்கின்றீர்கள். காந்தி தென்னாப்பிரிக் காவிலிருந்து திரும்பிய ஆண்டு; இந்தியத் தேசிய காங்கிரஸில் அவரது பங்கு; மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்; மதப் பிரதிநிதித்துவம்; ஜாலியன் வாலாபாக் படுகொலை; ஒத்துழையாமை இயக்கம்; சட்ட மறுப்பு இயக்கம்; வட்ட மேஜை மாநாடுகள்; காந்தி-இர்வின் ஒப்பந்தம்; உப்பு சத்தியாகிரகம்; வெள்ளையனே வெளியேறு இயக்கம்; கிரிப்ஸ் மிஷன்; நேரு-காந்தி; பட்டேல்-காந்தி, அம்பேத்கர்-காந்தி; நடப்பு உலகில் காந்தியம், என்று படிக்கின்ற அத்தனை விஷயத்துக்கும் 15- அடுக்கு தகவல் சேகரிப்பும் குறிப்பெடுத்தலும் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

🌻இந்த நிமிடத்தில் நம் இலக்கினை நோக்கி நாம் என்ன செயலாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வும்,ஆத்ம ரீதியான உழைப்புமே நம்மை இவ்வகையான தேர்வுகளில் வெற்றிபெறச் செய்யும்.

What is Credit Card Skimming (கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?)

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம்.
 
இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

1/8
எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?
பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.

2/8
தப்பிக்க வழிகள்!!
இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

3/8
பில்களை நேரடியாக செலுத்துங்கள்
உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.

4/8
ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை
எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

5/8
எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்
எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.

6/8
வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்
கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

7/8
போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம்
நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.

8/8
புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.

Thursday, November 19, 2015

Secret behind the Tamil Karthikai Deepam (கார்த்திகை தீபமும் - தமிழர் மருத்துவமும் ...)



கார்த்திகை தீபமும் - தமிழர் மருத்துவமும் ...
=======================================


கார்த்திகை மாதம் குளம் ,குட்டை ,ஏரிகள், கண்மாய் என  அத்துனை  நீர்நிலைகளும் நிறைந்து பெரும்பாலும்  இரவு வேளைகளில் மழை பெய்து கொண்டிருப்பதால்  வீட்டினுள் குளிரும் அதிகமிருக்கும் ...

காட்டில் உள்ள பூச்சிகள் மக்களின் வீடுகளுக்குள்  படையெடுக்கும் அப்பொழுது விச பூச்சிகள் , மற்றும்  வண்டுகளை வீட்டுக்குள் வராமல் தடுக்கவே கார்த்திகை  மாதம் முழுவதும் வீட்டினுள் தீபமேற்றும் வழக்கம்
தமிழரிடத்தில் தோன்றியது ....

அதாவது அக்காலகட்டத்தில் புன்னை மரத்தின்  என்னை கொண்டே கார்த்திகை மாதம் முழுதும்  தீபம் ஏற்ற பட்டது ....

புன்னை மரத்தின் என்னையை கொண்டு  தீபம் வைப்பதால்

1, வீட்டினுள் சற்று சூடான வெப்பநிலை நிலவும் ...

2, புன்னைமர எண்ணெய் எரியும் பொழுது வெளிப்படும் புகையால் வண்டுகள் வீட்டினுள் வராது ... (அந்த புகை வண்டு பூசிகளுக்கு பிடிக்காது )

3, புன்னை எண்ணையில் இருந்து வெளிப்படும் புகை காற்றை லேசாக்கும் குழந்தைகளின் சுவாசம் ஏதுவாக அமையும் பொருட்டு குளிர் காலத்தில் காற்று அதிக அடர்த்தியாக இருப்பதால் காற்றை லேசாக்கும் பொருட்டு ....

4, வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை நாய்கள் பாதுகாப்பது இருட்டில் வெளிச்சம் தேவைப்படுவதால் ...

5, வீட்டினுள் விசமுள்ள பாம்பு ,பூரான் போன்ற உயிரிகள் வந்தால் கான்பதக்கு ஏதுவாக

The simplest way to decrease belly in ten days! (பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!)


அருமையான மருத்துவக் குறிப்பு !

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்

Wednesday, November 4, 2015

Do not be afraid of dengue, we have 8 instruction. (டெங்கு பயம் இனி வேண்டாம் இருக்கிறது 8 வழிமுறைகள்!)



 


மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.

2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.

4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

Contact Form

Name

Email *

Message *